ADDED : ஜூலை 24, 2025 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீரனுார் : பழநி தொப்பம்பட்டி அருகே கீரனுார் பகுதியில் சாலை பணி பூமி பூஜையில் அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார்.
கீரனுார் பேரூராட்சி பகுதியில் ரூ.2 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் ரோடு அமைகிறது . இதற்கான பூமி பூஜையில் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். பேரூராட்சி தலைவர் கருப்புசாமி, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பொன்ராஜ், சுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, கீரனுார் பேரூர் செயலாளர் அன்பு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டனர்.