ADDED : ஜூலை 26, 2026 12:57 AM

வடமதுரை: வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இருந்து ஊராளிபட்டி செல்லும் தார் ரோடு பணி 5 மாதங்களாக கிடப்பில் உள்ளதால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.
தேர்தல் அறிவிப்புக்கு சில மாதங்களுக்கு முன்பு வடமதுரை ஒன்றியத்தில் பல இடங்களில் தார் ரோடு புதுப்பித்தல் பணி துவங்கின.
பழைய ரோடு பெயர்க்கப்பட்டு ஜல்லிக்கற்கள் பரப்பிய நிலையில் கிடப்பில் இருந்தன. இந்த ரோடுகளை பயன்படுத்தும் மக்கள் கூர்மையான ஜல்லிக்கற்கள் மீது நடந்தும் வாகனங்களை செலுத்தியும் செல்லும் போது கடும் சிரமப்படுகின்றனர்.
தினமலர் நாளிதழில் செய்தி வெளியான நிலையில் தற்போது வடமதுரை ஒன்றியத்தில் ரோடு பணிகள் ஒவ்வொன்றாக நடக்கின்றன. அதே நேரம் நெடுஞ்சாலைத்துறையின் வெள்ளபொம்மன்பட்டி ஊராளிபட்டி ரோட்டிற்கு இன்னமும் விடிவு காலம் ஏற்படாமல் இருப்பதால் மக்களின் அவதியும் தொடர்கிறது.
