ADDED : அக் 18, 2024 08:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சாம்சங் இந்திய தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கவேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்குரிய ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் திருச்சி ரோடு நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோட்டதலைவர் ராஜா தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க கோட்ட செயலாளர் அருள்தாஸ் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுகந்தி, டி.என்.ஹெச்.ஏ.,மணிகண்டன், டி.என்.ஹெச்.ஆர்.இ.ஏ.,மாநில துணைத் தலைவர் ராஜமாணிக்கம் பங்கேற்றனர். கோட்ட பொருளாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.