UPDATED : நவ 12, 2026 09:44 PM
ADDED : நவ 12, 2026 09:44 PM

அ நிறம் | அளவு
திண்டுக்கல்: நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பில் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் போராட்டம் நடந்தது. கோட்டத் தலைவர்கள் முருகேசன், பாலமுருகன், பரமேஸ்வரன் தலைமை வகித்தனர்.
41 மாத பணிநீக்க காலத்தை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பணிக்காலமாக கருத வேண்டும், பராமரிப்பில் தனியார் மயத்தை கைவிட வேண்டும், கிராமப்புற இளைஞர்களை சாலைப் பணியாளர்களாக நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது நீதி தராசை உயர்த்தி பிடித்து மவுனப் போராட்டம் நடத்தினர்.
அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் ராஜமாணிக்கம் பேசினார். கோட்டச் செயலாளர்கள் ரமேஷ்வரன், மணிமாறன், மணிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
