UPDATED : அக் 24, 2026 02:04 PM
ADDED : அக் 24, 2026 02:02 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. 41 மாத பணிநீக்க காலத்தை முறைப்படுத்தி நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். கோட்டச் செயலாளர் ரமேஸ்வரன், அனைத்து கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம், மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சாலைப் பணியாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
