ADDED : அக் 25, 2026 02:27 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே எஸ்.ஐ.ஆர்.,க்கு எதிரான மக்கள் கூட்டு மேடை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும், விகிதாசார பிரதிநிதித்துவத்தை வழங்கும் தேர்தல் சீர்திருத்தத்தை அமலாக்க வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைளை வலியுறுத்தினர். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் பாலசந்திரபோஸ் தலைமை வகித்தார். எஸ்.எப்.ஐ., மாவட்ட செயலாளர் நிரூபன், பல்வேறு இயக்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
