ADDED : நவ 11, 2025 04:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை உயர்நீதிமன்ற ஆணைப்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். கிராமப்புற இளைஞர்களை சாலை பணியாளர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலை பணியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி நீதிதராசு ஏந்தி கும்மியடி முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த இதற்கு கோட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் அருள்தாஸ் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி, செயலாளர் சுகந்தி, டி.என்.எஸ்.சி.ஏ., மாநில பொதுச்செயலாளர் சுரேஷ்குமார் , சங்க மாநில துணைத்தலைவர் ராஜமாணிக்கம் பேசினார். வட்டகிளை தலைவர் சேகர் கலந்து கொண்டனர். கோட்ட பொருளாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.

