/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
15 ஆண்டாகியும் புதுப்பிக்காத ரோடுகள்; ஏன் இந்த பிடிவாதம்
/
15 ஆண்டாகியும் புதுப்பிக்காத ரோடுகள்; ஏன் இந்த பிடிவாதம்
15 ஆண்டாகியும் புதுப்பிக்காத ரோடுகள்; ஏன் இந்த பிடிவாதம்
15 ஆண்டாகியும் புதுப்பிக்காத ரோடுகள்; ஏன் இந்த பிடிவாதம்
ADDED : அக் 23, 2024 05:08 AM

மாவட்டத்தில் 306 ஊராட்சிகள் , 23 பேரூராட்சிகள் உள்ளன. இங்கு ஏற்கனவே போடப்பட்ட பெரும்பாலான தார் ரோடுகள் தற்போது மிக மோசமாக சேதமடைந்துள்ளன. தற்போது மழை காலம் துவங்கிய நிலையில் சேதம் ரோடுகளில் நடந்து செல்லவோ, டூவீலர்களில் சென்று வரவே முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இதில் பெரும்பாலான தார் ரோடுகள் மெட்டல் ரோடுகளாக மாறிவிட்டன.
ஒரு ஊராட்சி பகுதியில் ஊராட்சி சாலை, ஒன்றிய சாலை என குறைந்தது 3 ரோடுகள் முதல் 5, 6 ரோடுகள் வரை சேதம் அடைந்துள்ளதாகவும் அவற்றை முறையாக செப்பனிடாததால் பொதுமக்களின் வசைகளுக்கு ஆளாவதாக ஊராட்சி நிர்வாகிகள் புலம்புகின்றனர். ஊராட்சி நிர்வாகங்களின் பதவி காலம் டிசம்பரில் முடிவடையும் நிலையில் உள்ளாட்சி தேர்தலும் நடைபெற வாய்ப்பு இல்லாததால் ரோடு வசதி உள்ளிட்ட எந்தப் பணிகளையும் முறையாக செய்ய முடியாமல் ஒரு வித மனக்குமுறலோடு வெளியேற உள்ளதாக ஊராட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். அடுத்து ஒன்றரை ஆண்டுகள் உள்ளாட்சித் தேர்தல் எதுவும் நடைபெறாத நிலையில், தனி அதிகாரியின் காலகட்டத்திலாவது ஊராட்சி பகுதியில் உள்ள அனைத்து ரோடுகளையும் புதுப்பித்து தரவேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கை எழுந்துள்ளது.

