sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கால்நடைகளால் ரோட்டோரங்களில் ஏற்படும் விபத்துக்கள்...

/

கால்நடைகளால் ரோட்டோரங்களில் ஏற்படும் விபத்துக்கள்...

கால்நடைகளால் ரோட்டோரங்களில் ஏற்படும் விபத்துக்கள்...

கால்நடைகளால் ரோட்டோரங்களில் ஏற்படும் விபத்துக்கள்...


ADDED : டிச 11, 2024 04:37 AM

Google News

ADDED : டிச 11, 2024 04:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கால்நடைகளால் ஏற்படும் விபத்துக்கள் : திண்டுக்கல் பழைய கரூர் ரோடு சுற்றித் திரியும் கால்நடையால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கால்நடைகள் சுற்றித்திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--கவுரிஈஸ்வரி, திண்டுக்கல்.

பள்ளத்தால் மக்கள் அச்சம் : திண்டுக்கல் - பழநி ரோடு நான்கு வழிச்சாலை சந்திப்பு அருகே சாக்கடை நடைமேடை சேதம் அடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் பள்ளம் தெரியாமல் கீழே விழுகின்றனர். நடைமேடையை சரிசெய்ய வேண்டும்.

--விக்னேஷ், திண்டுக்கல்.

-----------நாய்களால் வாகனஓட்டிகள் அவதி : திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் சுற்றி திரியும் நாய்களால் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். இவைகள் அச்சுறுத்தலாக உள்ளதால் மக்கள் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சவுந்தரராஜன், ரவுண்ட் ரோடு.

குப்பையால் உருவாகும் சீர்கேடு : பழநி பாலசமுத்திரம் ரோட்டில் பல நாட்கள் ஆகியும் குப்பையை அகற்ற படாததால் நோய் தொற்று அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆறுமுகம், பழநி.

-----------கொசு உற்பத்தியாகும் கழிவுநீர் : திண்டுக்கல் கிழக்கு பாட்டாளி தெரு ரேஷன் கடை அருகே சாக்கடை கால்வாயில் குப்பை அடைத்து கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் செடிகள் வளர்ந்து அப்பகுதி முழுவதும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. கால்வாயை சுத்தப்படுத்த வேண்டும்.

-முருகன், பழநி.

-----------சேதமான ரோடுகளால் பாதிப்பு : பழநி மாரியம்மன் கோயில் தெரு 9வது வார்டில் உள்ள ரோடுகள் கடந்த 4மாதங்களாக குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியில் பயணிக்கும் மக்கள் போக்குவரத்துக்கு சிரமப்படுகின்றனர். பாதையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், பழநி.

------------ஆக்கிரமிப்புகளால் அல்லல் : பழநி -திண்டுக்கல் ரோடு இ.எஸ்.ஐ. மருத்துவமனை பஸ் ஸ்டாப் அருகே ரோட்டில் ஆக்கிரமிப்பு உள்ளது. பஸ் ஸ்டாப்பில் பயணிகள் மிக சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இங்குள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

-நாகராஜன், ஆயக்குடி.

------------






      Dinamalar
      Follow us