/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டோர குடியிருப்புகளில் தேவை விபத்து விழிப்புணர்வு
/
ரோட்டோர குடியிருப்புகளில் தேவை விபத்து விழிப்புணர்வு
ரோட்டோர குடியிருப்புகளில் தேவை விபத்து விழிப்புணர்வு
ரோட்டோர குடியிருப்புகளில் தேவை விபத்து விழிப்புணர்வு
ADDED : நவ 22, 2025 03:21 AM
வடமதுரை: வடமதுரை - ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் குடியிருப்புகளில் விபத்துக்களை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் அவசியமாகிறது.
வடமதுரையில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை 43 கி.மீ., துாரத்திற்கு 7.5 மீட்டராக இருந்த ரோடு தற்போது 10.5 மீட்டர் கொண்டதாக அகலமாக்கப்பட்டுள்ளது. இந்த ரோட்டில் வழிநெடுக வேகத்தடைகள் ஏராளம் உள்ளன. இதனால் இவ்வழியே வாகனங்களில் செல்வோர் மிகுந்த சோர்வடைந்தனர். இவ்வழித்தடத்தில் பல இடங்களில் வீடுகளும், ரோடும் அருகருகே அமைந்ததுள்ளன. பழைய ரோட்டின் தன்மையுடன் புதிய ரோட்டையும் மக்கள் அணுகும் நிலை இருந்தால் விபத்துக்கள் நடக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது. எனவே ரோட்டோர குடியிருப்புகளில் விபத்து தவிர்க்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ய துறையினர் முன்வர வேண்டும்.