/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மக்களை அச்சுறுத்தும் ரோட்டோர மரங்கள்...
/
மக்களை அச்சுறுத்தும் ரோட்டோர மரங்கள்...
ADDED : டிச 09, 2024 06:10 AM

ரோட்டில் வீணாகும் குடிநீர் : திண்டுக்கல் சிலுவத்துார் ஏர்ப்போர்ட் நகர் அருகே குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக குடிநீர் வீணாகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதிக அளவில் வீணாவதால் சரி செய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--மாணிக்கம், திண்டுக்கல்.
-
ரோட்டோர மரத்தால் அச்சம் : பழநி பெரியபள்ளிவாசல் அருகே ஆரம்பசுகாதார நிலையம் இருந்த இடத்தில் மரம் பட்டுபோய் கீழே விழும் நிலையில் உள்ளது. குழந்தைகள்,போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி என்பதால் விபத்து ஏற்படும் முன் மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முகமதுஜின்னா, மானுார்.
-----------
ரோடு பள்ளத்தால் விபத்து : எரியோடு புதுரோட்டில் நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் தார் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழியில் செல்லும் டூவீலர்கள் விபத்தில் சிக்குகின்றன. சீரமைப்பு பணி செய்ய நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ---
-முருகேசன், எரியோடு.
-----------தாழ்வான மின் இணைப்புகள் : ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துப்பட்டி ஊராட்சி புளியராஜக்காபட்டி காலனியில் குடிநீர் தொட்டிக்கான மின் இணைப்பு தாழ்வான நிலையில் விபத்து அபாயகரமான உள்ளது . விபத்து நடக்கும் முன் சரி செய்ய வேண்டும்.
-அ.வடிவேல்,புளியராஜக்காபட்டி.
------------
வைகையாறு கரையில் மண் அரிப்பு : நிலக்கோட்டை அணைப்பட்டி வைகையாறு கரையில் விளாம்பட்டி,மட்டப்பாறை வரை இடையில் பல இடங்களில் சிமென்ட் தளம் உடைந்து மண் அரிப்பு ஏற்பட்டு கரை உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் புதர்மன்டி கிடக்கின்றது. இதை சீரமைக்க வேண்டும்.
-சி.அய்யர்பாண்டி,விளாம்பட்டி.
குப்பையால் உருவாகும் சீர்கேடு : பழநி இடும்பன் குளத்திலிருந்து கிரிவீதிக்கு செல்லும் ரோட்டில் பக்தர்கள் நடந்து செல்லும் நடைமேடையில் குப்பை கொட்டி குவித்துள்ளனர். இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மலர்விழி, பழநி.
-----------ஜோராக நடக்கும் கொசு உற்பத்தி : திண்டுக்கல் திருச்சி ரோடு ரயில்வே பாலம் கீழ்பகுதியில் மழை நீர் தேங்கி பல மாதங்களாக இருப்பதால் கொசு உற்பத்தி ஜோராக நடக்கிறது. பாசனம் படர்ந்து உள்ளது. இதனால் பாம்பு பூச்சிகள் தங்குகின்றது. தண்ணீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை வேண்டும்.
-பிரவீன்,திண்டுக்கல்.