sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வத்தலக்குண்டு பகுதியில் கொள்ளையர்கள் அட்டகாசம்

/

வத்தலக்குண்டு பகுதியில் கொள்ளையர்கள் அட்டகாசம்

வத்தலக்குண்டு பகுதியில் கொள்ளையர்கள் அட்டகாசம்

வத்தலக்குண்டு பகுதியில் கொள்ளையர்கள் அட்டகாசம்


ADDED : பிப் 04, 2024 05:50 AM

Google News

ADDED : பிப் 04, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டிவீரன்பட்டி : வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டியில் வீடு புகுந்து மிரட்டும் கொள்ளையர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வத்தலகுண்டு அருகே கீழக்கோயில்பட்டியில் 4 நாட்களுக்கு முன் நடராஜன் மனைவி நித்திய கல்யாணி 60,யிடம் டவுசர் கொள்ளையர் 6 பவுன் தாலிச் செயினை பறித்து தப்பினர். அங்கு 2 வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன.

பலரது வீடுகளில் கதவை தட்டப்பட்டதால் கிராமமே விழித்தது.

இரு நாட்களுக்கு முன் கே.சிங்காரக்கோட்டையில் சில வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் மாயமாகின. நேற்று இரவு 1 :00மணிக்கு பட்டிவீரன்பட்டி அருகே செங்கட்டாம்பட்டியில் வீட்டு வெளிப்புற கால்நடை கூடாரத்தில் படுத்திருந்த பாண்டி 68,யை மர்ம நபர்கள் கத்தியுடன் எழுப்பினர்.

பாண்டியின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் கருப்பு நிற உடை அணிந்த இருவர் தப்பினர்.

மேலும் 2 வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.

போலீசாரின் போதிய ரோந்து கண்காணிப்பு இல்லாததால் வத்தலகுண்டு, பட்டிவீரம்பட்டி, செங்கட்டாம்பட்டி, சிங்காரக்கோட்டை பகுதிகளில் கொள்ளை கும்பல் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.






      Dinamalar
      Follow us