/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வடமதுரை இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை
/
வடமதுரை இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை
ADDED : மார் 31, 2025 01:14 AM

வடமதுரை: மதுரை மாவட்டம் சமய நல்லுாரைச் சேர்ந்த பிரபு 56, சென்னை துரைப்பாக்கம் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். இவருக்கு திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடி நவீன்நகரில் வீடு உள்ளது. பிரபு ஆண்டிற்கு சில நாட்கள் இங்கு வந்து தங்கி செல்வார்.
நேற்றுமுன்தினம் இரவு இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதை கவனித்த பக்கத்து வீட்டினர் போலீசாருக்கு தகவல் தந்தனர். சென்னையில் இருந்து இன்ஸ்பெக்டர் பிரபு நேற்று மதியம் வந்தபின் வடமதுரை போலீசார் விசாரணை நடத்தினர்.
வீட்டு பீரோவில் இருந்த குறைந்த எடையுடைய ஒரு வைர நெக்லஸ், வெள்ளி குத்துவிளக்கு உட்பட ரூ. 1.90 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. கொள்ளையர்களை இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.