sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பாறை தகர்ப்பு தாராளம்;இயற்கை வளம் பாதிக்கும் அபாயம்

/

 பாறை தகர்ப்பு தாராளம்;இயற்கை வளம் பாதிக்கும் அபாயம்

 பாறை தகர்ப்பு தாராளம்;இயற்கை வளம் பாதிக்கும் அபாயம்

 பாறை தகர்ப்பு தாராளம்;இயற்கை வளம் பாதிக்கும் அபாயம்


ADDED : ஜன 04, 2026 05:51 AM

Google News

ADDED : ஜன 04, 2026 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: கொடைக்கானலில் அதிகாரிகளின் துணையுடன் அனுமதியின்றி பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படுவது தொடர்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலாத்தலமாக உள்ளது.சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இந்நகரில் ஏராளமானோர் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். இதில் ஆடம்பரமான பங்களாக்கள் உள்ளிட்ட கட்டுமானங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு கற்கள் தேவை என்று நிலையில் அனுமதியின்றி ஆங்காங்கே கம்பரஷர் மூலம் துளையிட்டு பாறைகள் வெடிவைத்து இஷ்டம் போல் தகர்க்கப்படுகிறது.ஏற்கனவே இம்மலைப் பகுதியில் மலைத்தள பாதுகாப்பு விதிமுறைப்படி பாறை தகர்ப்பு, கம்ப்ரஷர், போர்வெல், மண் அள்ளும் இயந்திரம் உள்ளிட்ட பயன்பாட்டிற்க்கு அப்போதைய கலெக்டர் வள்ளலார் தடைவித்தார். இந்நடைமுறை தற்போதும் உள்ளது.

இருந்த போதும் தற்போதுள்ள அதிகாரிகள் இதை சாதகமாக பயன்படுத்தி சிண்டிகேட் அமைத்து இது போன்ற தடை செய்யப்பட்ட இயந்திர பயன்பாட்டை அனுமதிக்கின்றனர்.

கொடைக்கானல் செல்லப்புரம் பகுதியில் ஆளும்கட்சி பிரமுகர் குடியிருப்பு பகுதியில் பாறைகள் வெடி வைத்து தகர்ப்பதும், இயந்திரம் மூலம் மண் சீரமைத்தல் பணி தாரளமாக நடந்து வருகிறது.

குடியிருப்புகள் இருந்த போதும் இரவு, பகலாக சர்வ சாதாரணமாக பாறைகள் தகர்க்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சிவனடி ரோடு, பூம்பாறை,பெருமாள்மலை கொடைக்கானல் ரோட்டிலும் இது போன்ற பணிகள் நடந்தேறுகின்றன.

இதற்கு வருவாய் துறை அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர். திண்டுக்கல் கலெக்டர் சரவணன் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆய்வு செய்து இது போன்ற பணிகளுக்கு கடிவாளம் இடவேண்டும். மேலும் இதற்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகளின் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.






      Dinamalar
      Follow us