ADDED : ஜூலை 04, 2025 03:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி: மணியக்காரன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் அகிலன் 28.
தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். மணியக்காரன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் துர்கா 19. இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் காதல்ஜோடி வீட்டை விட்டு வெளியேறினர். சாணார்பட்டி மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். உடன்படாததால் அகிலன், துர்கா இருவரும் விருப்பப்படி வாழ அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.