ADDED : ஆக 16, 2025 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: -சாணார்பட்டி அருகே மொட்டையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி.இவரது மகன் சங்கிலி குமார் 22. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கொசவபட்டியை சேர்ந்தவர் இருதயசாமி.இவரது மகள் நிசியா 19.இவர்கள் இருவரும் கடந்த இரு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காத நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சின்னாளபட்டி விநாயகர் கோயிலில் திருமணம் செய்தனர். சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மணமகனின் வீட்டார் சம்மதம் தெரிவிக்க மணமகன் வீட்டாருடன் அனுப்பி வைத்தனர்.

