/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பராமரிப்பு பணிக்காக பழநி கோயிலில் ரோப்கார் சேவை 31 நாட்கள் நிறுத்தம்

ADDED : ஜூலை 12, 2025 01:28 AM

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ஜூலை 15 முதல் 31 நாட்களுக்கு நிறுத்தப்படுகிறது.
பழநி முருகன் கோயில் சென்று வர படிப்பாதை, வின்ச், ரோப் கார் சேவைகளை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மூன்று நிமிடத்திற்குள் கோயிலுக்கு சென்று வர ரோப்கார் சேவை பயன்படுகிறது.
ஜூலை 15 முதல் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டு வருடாந்திர பராமரிப்பு பணிகள் துவங்கப்பட உள்ளன. பழுதடைந்த பாகங்கள், தேய்மானமான பொருட்கள் புதிதாக மாற்றப்பட உள்ளன.
31 நாட்கள் பராமரிப்பு பணிக்கு பின் பக்தர்களின் பயன்பாட்டிற்கு ரோப் கார் கொண்டு வரப்படும்.
அது வரை பக்தர்கள் படிப்பாதை, வின்ச் வசதியை பயன்படுத்திடலாம் என கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.