/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உலக ஓட்டுநர் தினத்தையொட்டி டிரைவர், கண்டக்டருக்கு ரோஜா
/
உலக ஓட்டுநர் தினத்தையொட்டி டிரைவர், கண்டக்டருக்கு ரோஜா
உலக ஓட்டுநர் தினத்தையொட்டி டிரைவர், கண்டக்டருக்கு ரோஜா
உலக ஓட்டுநர் தினத்தையொட்டி டிரைவர், கண்டக்டருக்கு ரோஜா
ADDED : ஜன 25, 2025 02:15 AM

திண்டுக்கல்:ஓட்டுநர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர்களுக்கு ரோஜா வழங்கி மண்டல போதுமேலாளர் சசிக்குமார் கவுரவித்தார்.
திண்டுக்கல், தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல போக்குவரத்து கழக பணிமனைகளில் 2000 பஸ் டிரைவர்கள், 1900 கண்டக்டர்கள் பணிபுரிகின்றனர்.
சுழற்சி முறையில் இவர்கள் விழாக்காலங்களிலும் கூட விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் உலக ஓட்டுநர் தினத்தையொட்டி டிரைவர், கண்டக்டர்களை கவுரவப்படுத்தும் வகையில் மண்டல பொதுமேலாளர் சசிக்குமார் மற்றும் அதிகாரிகள் திண்டுக்கல்லில் ரோஜா வழங்கினர்.
திண்டுக்கல் அரசு பஸ் டிரைவர் ஒருவர் கூறுகையில், ''இந்நிகழ்ச்சியை வாழ்நாளில் மறக்க முடியாது. ஒவ்வொரு டிரைவர்களும் உயிரை பணயம் வைத்து மக்களை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கிறோம். கவுரவப்படுத்திய அதிகாரிகளுக்கு நன்றி,'' என்றார்.