/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தத்தில் ராயப்பர் சர்ச் தேர்பவனி
/
நத்தத்தில் ராயப்பர் சர்ச் தேர்பவனி
ADDED : ஆக 17, 2025 12:33 AM

நத்தம்: நத்தம் ராயப்பர் சர்ச் திருவிழா தேர்பவனியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ராயப்பர் சர்ச் அன்னை மரியாவின் விண்ணேற்பு திருவிழா ஆக.,13 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து பாதிரியார்கள் தலைமையில் மூன்று நாட்கள் நவநாள் திருப்பலிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அலங்கரிக்கப்பட்ட மின் ரதத்தில் அன்னை மரியா, ராயப்பருடன் நகர்வலம் வரும் தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. மாரியம்மன் கோயில் தெரு,பெரியகடை வீதி,அரிசி மார்க்கெட், மூன்றுலாந்தர் வழியாக சர்ச்சை சென்றடைந்தது.
இதை தொடர்ந்து நற்கருணை ஆசீர் வழங்க கொடியிறக்கம் நடந்தது. நத்தம், ஆவிச்சிபட்டி, ஊராளிபட்டி உள்ளிட்ட சுற்று பகுதியினர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நத்தம் பாதிரியார்கள் டோமினிக் சேவியர், ஜெரால்டு ஸ்டீபன் செல்வா செய்திருந்தனர்.