ADDED : ஜன 28, 2025 12:38 AM

திண்டுக்கல் : ஆந்திரா குண்டூரை சேர்ந்தவர் வீராஜ மெய்லு64. ஆந்திராவில் காய்கறி கமிஷன் வியாபாரம் செய்கிறார்.
இவரிடமிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் காய்கறி வாங்கி விற்பனை செய்கின்றனர். பழநியிலும் சிலர் காய்கறிகளை வாங்கினர்.
அதற்கான பணத்தை வாங்க ஜன.,23ல் வீராஜ மெய்லு பழநி வந்தார். ரூ.16 லட்சத்தை பெற்றுக் கொண்ட இவர் அங்கிருந்து திருச்சி செல்லலும் பஸ்சில் சென்றார். பஸ் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் வந்தபோது பணம் திருடுபோனது. திண்டுக்கல் வடக்கு இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, எஸ். ஐ.,அருண் பிரசாத், கிரைம் டீம் எஸ்.ஐ., வீரபாண்டி தலைமையிலான போலீசார் பணத்தை திருடிய சாணார்பட்டி பாண்டித்துரை 47, மதுரை அலங்காநல்லுாரை சேர்ந்த செல்வம்54, மனைவி பிரியா 34, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.10.50 லட்சத்தை மீட்டனர்.

