/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நகைகளை வாங்கிய பின் ரூ.3 லட்சம் தராது ஓட்டம்; வேடசந்தூர் நகைக்கடையில் நூதன மோசடி

ADDED : பிப் 06, 2024 07:21 AM
வேடசந்துார் : வேடசந்துார் நகைக் கடையில் 20 பவுன் நகைகளை வாங்கிய நபர் ரூ.7 லட்சத்தை தந்த நிலையில் மீதி ரூ.3 லட்சத்தை வங்கியில் எடுத்து தருவதாக கூறி ஊழியரை அழைத்துச் சென்ற அவர் டூவீலரில் தப்பினார்.
வேடசந்துார் கடைவீதியில் நகைக்கடை வைத்திருப்பவர் தீபக் 37. இவரது கடைக்கு நேற்று நகை வாங்க வந்த ஒருவர் 10 பவுன் நகைகளை வாங்கிவிட்டு அதற்கான தொகை ரூ. 5 லட்சத்தை கொடுத்துள்ளார். அதன்பிறகு மேலும் 10 பவுன் நகைகளை தேர்வு செய்தார்.அதற்கு இரண்டு லட்சத்தை கொடுத்துள்ளார். மீதி உள்ள மூன்று லட்சத்திற்கு நகையை அடகு வைத்து தருவதாக கூறி வேடசந்துாரில் உள்ள அரசு வங்கிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு கணக்கு இருந்தால் தான் அடகு வைக்க முடியும் என தெரிவிக்க தனது தம்பிக்கு போன் செய்த அந்த நபர் தம்பி வந்ததை தொடர்ந்து மீண்டும் வங்கி சென்று ரூ.3 லட்சத்திற்கு நகைகளை அடகு வைக்க வேண்டும் என கூறி உள்ளனர். கூடுதலான தொகை தர முடியாது என தெரிவித்ததால் வெளியே வந்தனர்.
அதன் பிறகு நகையை வாங்கிய அவர்கள் டூவீலர்களில் தப்பி சென்றனர். வேடசந்துார் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரிக்கிறார்.