/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பன்னீர் அணி நிர்வாகிகள் மீது ரூ.34 லட்சம் மோசடி புகார்
/
பன்னீர் அணி நிர்வாகிகள் மீது ரூ.34 லட்சம் மோசடி புகார்
பன்னீர் அணி நிர்வாகிகள் மீது ரூ.34 லட்சம் மோசடி புகார்
பன்னீர் அணி நிர்வாகிகள் மீது ரூ.34 லட்சம் மோசடி புகார்
ADDED : நவ 27, 2024 02:07 AM
பழனி:திண்டுக்கல், பழனி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஆத்திக்கண்ணன், 35. இவர், பழனியில் அழகு நிலையம் நடத்துகிறார். இவரிடம், 2023ல் அதே பகுதியை சேர்ந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி மாவட்ட பொருளாளராக உள்ள மாதவத்துரை, 39, கோவையைச் சேர்ந்த அந்த அணியின் மாநில அமைப்பு செயலர் கழில்ரகுமான் ஆகியோர் தங்களுக்கு பல அதிகாரிகளை தெரியும், அதன் வாயிலாக பழனி முருகன் கோவிலில் டிக்கெட் வழங்கும் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.
நம்பிய ஆத்திக்கண்ணனும், அவர்கள் கேட்ட போதெல்லாம் பணத்தை வழங்கினார். இதேபோல் பழனியை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 11 பேரிடம் பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, 34 லட்சம் ரூபாயை பெற்றனர். பணத்தை வழங்கியவர்கள் பணி நியமன உத்தரவு கேட்டபோது, இருவரும் தலைமறைவாகினர். ஏமாற்றப்பட்ட 12 பேர் புகாரின்படி, தலைமறைவான கழில்ரகுமான், மாதவத்துரையை போலீசார் தேடி வருகின்றனர்.