/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரூ.4.66 கோடி கையாடல் விவகாரம்: நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்
/
ரூ.4.66 கோடி கையாடல் விவகாரம்: நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்
ரூ.4.66 கோடி கையாடல் விவகாரம்: நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்
ரூ.4.66 கோடி கையாடல் விவகாரம்: நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்
ADDED : ஆக 02, 2024 04:58 PM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடி கையாடல் விவகாரத்தில் ஏற்கனவே 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மாநகராட்சி நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாநகராட்சியில் கணக்குபிரிவு இளநிலை உதவியாளராக நெட்டுத்தெருவை சேர்ந்த சரவணன் பணியாற்றினார். இவர் 2023 ஜூனிலிருந்து மக்கள் மாநகராட்சிக்கு செலுத்திய வரிப்பணத்தை முறையாக வங்கியில் செலுத்தாமல் சிறிது சிறிதாக கையாடல் செய்தார். இந்த விவகாரம் சக ஊழியர்களுக்கு தெரியவர மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது. தொடர்ந்து அவர் பணியாற்றிய காலம் முழுவதும் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நடந்த ஆய்வில் ரூ.4.66 கோடி கையாடல் செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் இச்சம்பவத்தில் ஈடுபட்ட சரவணன்,அதை முறையாக கவனிக்காத கண்காணிப்பாளர் சாந்தி,இளநிலை பொறியாளர் சதீஷ் உள்ளிட்டோரை சஸ்பெண்ட் செய்தது. தொடர்ந்து சரவணன்,மீது போலீசில் புகாரளிக்கப்பட்டு தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இந்நிலையில் மாநகராட்சியில் 2 ஆண்டுகளாக நிர்வாக அலுவலராக பணியாற்றிய வில்லியம்சகாயராஜூம்,இந்த கையாடல் சம்பவத்தை இத்தனை மாதங்களாக முறையாக கவனிக்காமல் இருந்ததற்காக நேற்று கமிஷனர் ரவிச்சந்திரன்,அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். குற்றப்பிரிவு போலீசார் சரவணனிடம் முழுமையான விசாரணை செய்த பின் பலரும் இந்த விவகாரத்தில் சிக்கவும் வாய்ப்புள்ளது.