/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.8.50 லட்சம் மோசடி
/
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.8.50 லட்சம் மோசடி
ADDED : நவ 11, 2025 04:03 AM
திண்டுக்கல்: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8.50 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட 3 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி ஆர்.எப். சாலை பகுதியை சேர்ந்தவர் ஜோசப் தாமஸ் ரிச்சர்டு (50), ஆசிரியர் பயிற்சி கல்வி படித்துள்ளார். 2013ல் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-4 தேர்வு எழுதி விட்டு முடிவுக்காக காத்திருந்தார். அப்போது பழநியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் பெஞ்சமின் அறிமுகம் கிடைத்தது.
சென்னை மாநகர அரசு போக்குவரத்துக்கழக மெக்கானிக் கணேஷ்குமார் என்பவர் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக அவர் கூறியுள்ளார். இதை நம்பிய ஜோசப் தாமஸ் ரிச்சர்டு ரூ.6 லட்சத்தை கணேஷ்குமார், அவருடைய மனைவி கவிதாகுமாரியிடம் கொடுத்துள்ளார். அதோடு சான்றிதழ்கள், குரூப்-4 தேர்வுக்கு உரிய ஹால் டிக்கெட் ஆகியவற்றையும் கொடுத்தார்.
இதற்கிடையே குரூப்-4 தேர்வு முடிவில் அவருடைய பெயர் இல்லை. இதுகுறித்து அவர் கேட்ட போது, 2 மற்றும் 3-வது கட்ட கலந்தாய்வு பட்டியலில் பெயர் வரும் என்று கூறினர்.
மேலும் பள்ளி கல்வித்துறையின் ஆய்வக உதவியாளர் தேர்வை எழுதும் படியும், இரண்டில் ஏதாவது ஒரு வேலையை பெற்றுத் தருவதாகவும் தெரிவித்து உள்ளனர். இதற்காக மேலும் ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 900-ஐ பெற்றுக்கொண்டனர். ஆனால் உறுதி அளித்தபடி அரசுவேலை வாங்கி கொடுக்கவில்லை.
திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப்பிடம் ஜோசப் தாமஸ் ரிச்சர்டு புகார் அளித்தார். கணேஷ் குமார், கவிதாகுமாரி, பெஞ்சமின் ஆகியோரிடம் குற்றப்பிரிவு டி.எஸ்.பி., குமரேசன், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி விசாரிக் கின்றனர்.

