/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மனவளர்ச்சி குன்றியோருக்கு ரூ.13.62 கோடி உதவித்தொகை
/
மனவளர்ச்சி குன்றியோருக்கு ரூ.13.62 கோடி உதவித்தொகை
மனவளர்ச்சி குன்றியோருக்கு ரூ.13.62 கோடி உதவித்தொகை
மனவளர்ச்சி குன்றியோருக்கு ரூ.13.62 கோடி உதவித்தொகை
ADDED : செப் 22, 2024 05:28 AM

திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்டத்தில் 2023--24ல் மட்டும் மன வளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித் தொகையாக 5676 பேருக்கு ரூ.13.62 கோடி வழங்கப்பட்டுள்ளதாக,'' மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு துறையின் பங்கு
மாற்றுத்திறனாளிகள் உதவிக்காகவும், உணவுக்காகவும் பிறரை சார்ந்து வாழக்கூடாது என்பதற்காக அவர்களின் வாழ்க்கையில் தன்னம்பிக்கை ஏற்படுத்தி நாமும் சாதிக்க முடியும் என்ற நோக்கில் மாற்றுத்திறாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி, மாத உதவி தொகை, மூன்று சக்கர கைக்கிள், டூவீலர், செயற்கை உடல் உறுப்புக்கள் என தோளோடு தோள் கொடுக்கும் வகையில் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறுவது
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு மருத்துவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. குடும்ப அட்டை, ஆதார் அட்டை,4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டு வர வேண்டும். 42 ஆயிரம் பேர் வரை அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
என்னென்ன நலத்திட்டங்கள் உள்ளது
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, இலவச உபகரணங்கள், கல்வி,திருமண உதவித் தொகைகள், பயணச்சலுகை, வங்கிக்கடன், மாதாந்திரபராமரிப்பு உதவித்தொகை, வேலைவாய்ப்பற்றோர் நிவாரணத்தொகைகள் வழங்கப்படுகிறது.
மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை
40 சதவீதம் மேல் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.2000, 75 சதவீதம் மேல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.2000, 40 சதவீதம் மேல் தசைசிதைவு, தொழுநோய், முதுகு தண்வடம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2000 வழங்கப்படுகிறது.
இத தவிர உதவியாளரை வைத்துக் கொள்பவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 2023--24ல் மன வளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித் தொகையாக 5676 பேருக்கு ரூ.13.62 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கடன் மான்யம், கல்வித் உதவித் தொகை வழங்கப்படுகிறதா
கடந்த நிதியாண்டில் மட்டும் சிறு, குறு தொழில் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு வங்கி கடன் மானியமாக 63 பேருக்கு ரூ.14 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவிகள் 329 பேருக்கு ரூ.21 லட்சத்து 46 ஆயிரம் கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்வோருக்கு நிதியுதவி வழங்கப்படுகிறதா
கை, கால் பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்த சாதாரண நபர்கள் 5 பேருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், செவித்திறன் பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்த 2 பேருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம்,பார்வையற்றோரை திருமணம் செய்து கொண்ட 2 பேருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது என்றார்.