/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் தீபாவளி சிறப்பு பஸ்களால் ரூ.2.73 கோடி வசூல்
/
திண்டுக்கல்லில் தீபாவளி சிறப்பு பஸ்களால் ரூ.2.73 கோடி வசூல்
திண்டுக்கல்லில் தீபாவளி சிறப்பு பஸ்களால் ரூ.2.73 கோடி வசூல்
திண்டுக்கல்லில் தீபாவளி சிறப்பு பஸ்களால் ரூ.2.73 கோடி வசூல்
ADDED : நவ 05, 2024 04:27 PM

திண்டுக்கல்;தீபாவளியை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளுக்காக ஏற்பாடு செய்த சிறப்பு அரசு பஸ்களால் திண்டுக்கல் மண்டல
போக்குவரத்து கழகத்திற்கு 2 நாளில் ரூ.2.73 கோடி வசூலானது. விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய அலுவலர்களுக்கு மண்டல அதிகாரிகள் நன்றி தெரிவித்து சர்குலர் அனுப்பியுள்ளனர்.
தீபாவளி விடுமுறை நாளில் வெளியூரில் வேலை செய்யும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு குடும்பத்தோடு செல்கின்றனர். மீண்டும் விடுமுறை முடிந்து தாங்கள் வேலை செய்யும் நகரங்களுக்கு செல்லும் போது அதிக கூட்ட நெரிசல் ஏற்படும். இதை தவிர்க்க தமிழக
அரசு தரப்பில் கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்க அந்தந்த மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மண்டலத்தில் திண்டுக்கல்லிலிருந்து கோவைக்கு 200 பஸ்கள்,திருப்பூருக்கு 100 பஸ்கள்,சென்னைக்கு 150 பஸ்கள் என 450சிறப்பு பஸ்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அக்.29லிருந்து நவ.4 வரை பயணிகள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டது.
இதில் விடுமுறைஎடுக்காமல் 1000த்திற்கும் மேலான கண்டக்டர்கள்,டிரைவர்கள் பணியில் இருந்தனர். அக்.31 தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில்
நவ.1,2,3. வரை வெளியூரிலிருந்து திண்டுக்கல் வந்த மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து தீபாவளி விடுமுறையை கொண்டாடினர்.
நவ. 3இரவு முதல் விடுமுறைக்காக வந்தவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சென்னை,கோவை,திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு
செல்ல தொடங்கினர். அவர்களுக்கென சிறப்பு பஸ்களும் 24 மணி நேரமும் பயன்பாட்டில் இருந்தது. நவ.3ல் சிறப்பு பஸ்கள் மூலம்
திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழகத்திற்கு ரூ.1.12 கோடி,நவ.4ல் ரூ.1.61 கோடி என 2 நாளில் ரூ.2.73 கோடி வசூலானது. இந்த
விடுமுறை நேரத்தில் சிறப்பு பஸ்களில் பணியாற்றிய பணியாளர்களுக்கு மண்டல போக்குவரத்து அலுவலகம் சார்பில் நன்றி தெரிவித்து
சர்குலர் அனுப்பப்பட்டுள்ளது.

