UPDATED : நவ 01, 2026 11:49 PM
ADDED : நவ 01, 2026 07:24 PM

அ நிறம் | அளவு
வடமதுரை: வடமதுரையில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.,) சார்பில் விஜயதசமி விழா பதசஞ்சலன் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
திருக்கோயில் புனரமைப்பு சேவகர் லோகநாதன் துவக்கி வைத்தார். மேற்கு ரத வீதியில் சித்திமுக்தி விநாயகர் கோயில் முன்பாக துவங்கி ரத வீதிகள், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, இ.பி., காலனி வழியே ஊர்வலம் நடந்தது. பின்னர் கனரா வங்கி அருகில் வழக்கறிஞர் மோகன் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. மதுரை மண்டல தலைவர் சிவலிங்கம், 'இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம் பண்பாடுகள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ்., சேவைகள்.' குறித்து விளக்கிப் பேசினார்.
