UPDATED : அக் 28, 2026 09:59 PM
ADDED : அக் 28, 2026 09:54 PM
திண்டுக்கல்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கவன ஈர்ப்பு தர்ணா நடந்தது.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் இளநிலை பொறியாளர்களுக்கு உதவி பொறியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
மாவட்ட தலைவர் முருகதாஸ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் மோகன் இரங்கல் தீர்மானம் வாசித்தார். திண்டுக்கல் கோட்டை செயலாளர் கணேசன் வரவேற்றார். அரசு ஊழியர் ஓய்வூதிய சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், மாநில தணிக்கையாளர் ராமமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் வீரகடம்ப கோபு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜான்பாஸ்டின்டல்லஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பழனி கோட்டச் செயலாளர் ராமசாமி நன்றி தெரிவித்தார்.
