/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் மாநாடு
/
ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் மாநாடு
ADDED : ஜன 08, 2024 05:47 AM
திண்டுக்கல்,: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில மாநாடு திண்டுக்கல்லில் நடந்தது.
மாநில தலைவர் ராமாநிதி தலைமை வகித்தார். மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் மணிகண்டன் வரவேற்றார். மாநில பொதுச்செயலர் கிருஷ்ணசாமி,சி.பி.ஐ., மாநில செயலர் முத்தரசன், ஏ.ஐ.டி.யு.சி., தேசிய செயலர் மூர்த்தி பேசினர். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, ஊரக வளர்ச்சி,ஊராட்சித்துறை இயக்குநர் பொன்னையா, எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், மாரிமுத்து, சி.பி.ஐ., மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானம் பங்கேற்றனர். இயக்குநர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் ரூ.13,848 யை அமல்படுத்த வேண்டும். துாய்மைக் காவலர்கள்,துாய்மைப் பணியாளர்கள், பள்ளி சுகாதாரப் பணியாளர்கள், ஊக்குவிப்பாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.11,848 வேறுபாடு இல்லாமல் வழங்க வேண்டும் என்பது உள்பட 10 க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தின் மாநில பொருளாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.