/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஊரக திறனறி தேர்வு213 பேர் ஆப்சென்ட்
/
ஊரக திறனறி தேர்வு213 பேர் ஆப்சென்ட்
ADDED : பிப் 09, 2025 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஊரக திறனாய்வுத் தேர்வுக்கு 2938 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 213 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
ஊரக பகுதிகளை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர்களுக்காக ஆண்டுதோறும் திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தல் 2 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 2938 மாணவர்கள் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த நிலையில் 2725 மாணவர்கள் பங்கேற்றனர். இதற்காக திண்டுக்கல், நத்தம், பழநி, வத்தலகுண்டு உட்பட 13 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று நடந்த தேர்வில் 213 மாணவர்கள் பங்கேற்கவில்லை.

