sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குப்பையால் மாசடையும் சடையங்குளம் கண்மாய்

/

குப்பையால் மாசடையும் சடையங்குளம் கண்மாய்

குப்பையால் மாசடையும் சடையங்குளம் கண்மாய்

குப்பையால் மாசடையும் சடையங்குளம் கண்மாய்


ADDED : மார் 09, 2024 09:17 AM

Google News

ADDED : மார் 09, 2024 09:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம் கண்மாய் குப்பை, கட்டட இடிபாடுகள் கொட்டப்படுவதாலும், கழிவுநீர் கலப்பதாலும் மாசடைந்து வருகிறது. கண்மாயை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் தங்கச்சியம்மாபட்டி, காப்பிலியபட்டி பகுதியில் சடையன்குளம் அமைந்துள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில உள்ள இந்த குளம் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி இருந்தது. 2018 ல் தன்னார்வ அமைப்புகள் முயற்சியால் எல்லைகள் அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. குளத்திற்கு தண்ணீர் கொண்டு சேர்க்கும் கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்ததால் மழைநீர் கண்மாய்க்கு சென்றடைந்தது. கால்வாய் தூர்வாரப் படுவதற்கும் முன்பு வரை இப்பகுதியில் கனமழை பெய்தாலும் கூட காட்டாற்று வெள்ளம் எட்டிப் பார்க்காது. பரப்பலாறு அணை தண்ணீர் தான் குளத்தை நிரப்பி வந்தது.

இந்த குளத்தில் 50க்கு மேற்பட்ட போர்வெல்கள் பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலம் 25 க்கு மேற்பட்ட கிராம மக்களுக்கு குடிப்பதற்கு நல்ல குடிநீர் கிடைத்து வருகிறது. தற்போது மேற்படி கிராம மக்களுக்கு துாய்மையான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குளத்துப் பகுதியில் குப்பை , கட்டடக்கழிவுகள் கொட்டப்பட்டு குளத்தை சுருக்கி வருவதுடன் குளத்தின் துாய்மையை கெடுத்து வருகின்றன. குளத்தில் கழிவு நீர் கலப்பதால் மாசடைந்து வருவதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். குளத்தை சுற்றி நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. குளத்தில் தண்ணீர் வற்றிய காலத்திலும் கூட சுற்றிய பகுதிகளில் கிணற்றுப் பாசனம் மூலம் விவசாயம் நடைபெறுகிறது.

குப்பை கொட்டுவதால் பாதிப்பு


பி.சிவசாமி, வார்டு உறுப்பினர், தங்கச்சியம்மாபட்டி ஊராட்சி:

நீர்நிலைகளில் குப்பை கொட்டக்கூடாது என நீதிமன்றம் கூறி உள்ளது. ஆனால் இதற்கு மாறாக சடையன்குளம் கண்மாய் பகுதியில் குப்பை கொட்டப்பட்டு தீ வைத்து எடுக்கப்படுகிறது. இதனால் குளம் மாசடைவதுடன் மட்டுமின்றி சுற்றுச்சூழலும் பாதிக்கிறது. குப்பை கொட்டுவதை நிறுத்தி கண்மாயை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதான் குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் நல்ல தண்ணீர் கிடைக்கும்.

துாய குடிநீர் கிடைக்காது


டி.சக்திவேல், விவசாயி, தங்கச்சியம்மாபட்டி: கழிவுநீர் கலக்காமல் இருந்த இந்தக் குளத்தில் தற்போது கழிவுநீர் விடப்படுகிறது. இவ்வாறு விடப்படும் கழிவு நீர் நிலத்துக் அடியில் சென்று குளத்தில் இருக்கும் துாய நீருடன் கலந்து மாசடைய தொடங்கும். நாளடைவில் குளம் முழுவதும் கழிவுநீர் தேங்கி தண்ணீர் முழுவதும் மாசடைந்துவிடும் . இதனால் குளத்தில் இருந்து குடிநீர் எடுத்து வரும் 25 கிராம மக்களுக்கு குடிநீர் கிடைப்பது அரிதாகிவிடும்.

வேளாண் தொழில் பாதிக்கும்


எம்.ராஜேந்திரன், விவசாயி, தங்கச்சியம்மாபட்டி: ஒட்டன்சத்திரம் சின்ன குளத்தில் கழிவு நீர் கலப்பதால் நிறம் மாறுபட்டு விவசாயத்திற்கு பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இதேநிலை சடையன்குளத்திற்கும் ஏற்படும். பாசனத்திற்கு கழிவுநீர் தான் கிடைக்கும் சூழல் உருவாகும். சிறிது சிறிதாக குப்பை , கழிவுநீர் சேர்க்கப்பட்டு குளத்து நீரை விவசாயத்திற்கு கூட பயன்படுத்த முடியாத நிலைக்கு கொண்டு சென்று விடும்.

இடிபாடுகளை கொட்டாதீங்க


எஸ்.முத்துவீரன், விவசாயி, தங்கச்சியம்மாபட்டி: அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் கால்வாய் குளத்தில் சேரும் இடத்தில் வீட்டின் ஓடுகள், கட்டட இடிபாடுகள் கொட்டப்பட்டு நீர்வரத்துக்கால்வாய் பகுதியை குறுகியதாக மாற்றி உள்ளது. குளத்தில் எவ்வித கழிவுகளையும் கொட்டக்கூடாது. கொஞ்சம் தானே கொட்டி உள்ளோம் என நினைத்தால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே குளத்தில் கழிவுகள் கொட்டுவதை தடை செய்ய வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us