/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அய்யலுாரில் ரூ.3 கோடிக்கு ஆடு, கோழி விற்பனை
/
அய்யலுாரில் ரூ.3 கோடிக்கு ஆடு, கோழி விற்பனை
ADDED : ஜன 12, 2024 12:42 AM

வடமதுரை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு மேல் ஆடு, கோழிகள் விற்பனையானது.
அய்யலுாரில் வியாழன்தோறும் கூடும் வாரச்சந்தையில் காலையில் ஆடு, கோழி விற்பனை அதிகம் நடக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு முந்தைய சந்தை என்பதால் நேற்று ஆயிரக்கணக்கில் ஆடு, கோழிகள் விற்பனைக்கு வந்தன. அதிகாலை 2:30 மணிக்கு துவங்கிய வியாபாரம் விறுவிறுப்புடன் காலை 8:30 மணி வரை நடந்தது.
வடமதுரை வியாபாரி என்.சுப்பிரமணி கூறியதாவது:
பொங்கல் பண்டிகைக்காக இறைச்சி தேவை அதிகமிருக்கும் என்பதால் ஆடு, கோழிகளின் விலை அதிகரித்தது. நாட்டு கோழி கிலோ ரூ.500, ஆடு ரூ. 750, சண்டை சேவல் ரூ.1000 முதல் ரூ.15,000 வரை விற்கப்பட்டது. சந்தையில் நடந்த விற்பனை ரூ.3 கோடியை தாண்டும் என்றார்.