/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அடமானம் வைத்த நிலம் விற்பனை: 5 பேர் மீது வழக்கு
/
அடமானம் வைத்த நிலம் விற்பனை: 5 பேர் மீது வழக்கு
ADDED : டிச 30, 2025 06:35 AM
திண்டுக்கல்: வத்தலக்குண்டில் கல்லுாரி அதிபர் அடமானம் வைத்த ரூ.1 கோடி நிலத்தை விற்பனை செய்ததாக ஐவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை அரசரடி பகுதியை சேர்ந்த புகழேந்தி மனைவி சகிலா. வத்தலக்குண்டுவில் பாலிடெக்னிக் கல்லுாரி நடத்தி வரும் இவர் திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப்பிடம் அளித்த புகார் மனுவில், '2019ல் கல்லுாரி விரிவாக்கம், வளர்ச்சிக்காக நிலக்கோட்டை தெப்பத்துப்பட்டியை சேர்ந்த மொக்கையன், அவரது மகன் தவமணி ஆகியோரிடம் ரூ.1 கோடி வரை கடன் பெற்றேன். அதற்கான வட்டி தொகையை மாதந்தோறும் செலுத்தினேன். கொரோனா காலத்தில் சரிவர வட்டித்தொகை செலுத்த முடியவில்லை.
இதையடுத்து நிலக்கோட்டை தாலுகா விராலிப்பட்டி பகுதியில் எனக்கு சொந்தமான நிலத்தை கடன் தொகைக்காக அடமானம் வைத்தேன். அதற்கான ஆவணங்களும் முறையாக பதிவு செய்யப்பட்டது.
இருவரும் எனது நிலத்தை தாராபுரம் தாலுகா ராவுத்தன்பாளையத்தை சேர்ந்த தமிழ்செல்விக்கு முறைகேடாக விற்பனை செய்துள்ளனர்.
இதற்கு கணவாய்பட்டியை சேர்ந்த மாயாண்டி, குன்னுாத்துப்பட்டியை சேர்ந்த கவிதா உடந்தையாக செயல்பட்டுள்ளனர். மொக்கையன் உட்பட 5 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர கேட்டுள்ளார்.
மனு மீது நடவடிக்கை எடுக்க குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டதையடுத்து மொக்கையன் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

