ADDED : டிச 29, 2025 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியில் ஏராளமான வெளிமாநில, மாவட்ட பக்தர்கள், அதிகாலை முதலே கிரிவீதியில் காத்திருந்து முருகன் கோயிலுக்கு சென்றனர். ரோப் கார்,வின்சிலும், கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். குடமுழுக்கு மண்டபம் மூலம் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தரிசனம் செய்ய 5 மணி நேரம் ஆனது. நகரில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருந்தது.
அடிவாரம் பகுதியில் உள்ள முக்கிய ரோடுகளில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

