/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
துாய்மை பணியாளர் திட்ட கூட்டம்
/
துாய்மை பணியாளர் திட்ட கூட்டம்
ADDED : நவ 20, 2025 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியில் நகராட்சி துாய்மை பணியாளர் ஆய்வு நலத்திட்ட உதவி வழங்கும் கூட்டம் நலவாரிய தலைவர் ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் டிட்டோ, துணைத் தலைவர் கந்தசாமி பங்கேற்றனர். துாய்மை பணியாளர்களின் தேவைகள் குறித்து நலவாரியத் தலைவர் கேட்டறிந்தார்.
அதன் பின் அவர் கூறியதாவது :துாய்மை பணியாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் நகராட்சியில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். எதிர்வரும் காலங்களில் துாய்மை பணி ஒப்பந்தத்தை தனியாருக்கு ஒதுக்காமல் அரசு பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

