/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பதுவை அந்தோணியார் சர்ச் விழாவில் சப்பர பவனி
/
பதுவை அந்தோணியார் சர்ச் விழாவில் சப்பர பவனி
ADDED : பிப் 13, 2024 06:40 AM

திண்டுக்கல், : திண்டுக்கல் ஏ.பி.நகரில் 13 நாட்கள் ஆடம்பர கூட்டு திருப்பலியுடன் நடந்த பதுவை அந்தோணியார் சர்ச் ஆண்டு விழா சப்பர பவனியுடன் நிறைவடைந்தது.
திண்டுக்கல் பேகம்பூர் அந்தோணியார் தெரு ஏ.பி.நகரிலுள்ள பதுவை அந்தோணியார் சர்ச் 117வது ஆண்டு திருவிழா அந்தோணியார் அறக்கட்டளை சார்பில் சவேரியார் பாளையம் பாதிரியார்
பாதிரியார் ஜஸ்டின் தலைமையில் ஜன.30ல் கொடியேற்றத்துடனர் துவங்கியது.
13 நாட்கள் நடந்த இந்த விழாவில் அன்பிய குழுக்களான புனித திருப்பயணமாதா, எடல்குயின், அன்பின் நேசர், வளனார், அருளானந்தர், லுார்து மாதா சபையினர்கள் சார்பில் நவநாள் சிறப்பு மன்றாட்டு கூட்டு திருப்பலி நடந்தது.
பிப்.10ல் சிறப்பு கூட்டு திருப்பலியுடன் இரவில் மின்னொளி சம்மனசு வரவேற்பு சப்பர பவனி வான வேடிக்கையுடன் நடந்தது.
இறுதி நாளான பிப்.11ல் சப்பர பவனியுடன் கொடியிறக்கம் நடந்தது. மாலைப்பட்டி தொன்போஸ்கோ கம்யூ., கல்லுாரி உதவி அதிபர் பிரிட்டோ கூட்டு திருப்பலி நிறைவேற்றினார்.
அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜசேகர், தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
விளையாட்டு போட்டிகள் நடத்தி விழா குழுவினர்கள் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் எட்வின் ராஜா, பதுவை அந்தோணியார் ஆலய அறக்கட்டளை உறுப்பினர் அந்துவான் ஊர் மக்கள் செய்திருந்தனர்.