/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாணவர்களுக்கு சேமிப்பு உண்டியல்
/
மாணவர்களுக்கு சேமிப்பு உண்டியல்
ADDED : ஜூன் 10, 2025 01:56 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட 12ம் புத்தகத் திருவிழா அங்கு விலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஆகஸ்ட் 28ல் தொடங்கி நவ.7 வரை நடக்கிறது.
இதற்கான வாகன பிரசாரத்தை கலெக்டர் சரவணன் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு இலவச சேமிப்பு உண்டியல்களை வழங்கினார்.கலெக்டர் கூறியதாவது: மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம் லதிண்டுக்கல் இலக்கியக் களம் இணைந்து புத்தகத் திருவிழா நடத்துகிறது.
மாணவர்களிடையே புத்தக வாசிப்பில் ஆர்வம் ஏற்படுத்தவும், பணம் சேமித்து புத்தகம் வாங்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் 32 ஆயிரம் உண்டியல்கள் வழங்கப்படுகிறது.
முதற்கட்டமாக 2500 உண்டியல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு சலுகை விலையில் புத்தகங்கள் வழங்கப்படும் என்றார்.
டி.ஆர்.ஓ.,ஜெயபாரதி, கலெக்டர் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார் கலந்துகொண்டனர்.