/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பயமுறுத்தும் 'கட கட' சத்தம்: பழநி வழி எக்ஸ்பிரஸ் ரயில்களில் சேதமான பெட்டிகள்

ADDED : ஜன 17, 2025 07:08 AM

பழநி மார்க்கமாக செல்லும் திருவனந்தபுரம் -மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு- சென்னை எக்ஸ்பிரஸ் என இரு ரயில்கள் இயங்குகின்றன.
இந்த இரு ரயில்களிலும் ஏசி பெட்டிகள் உட்பட அனைத்து பெட்டிகளும் சேதமாகி அதிக சத்தம் எழுப்புகிறது. இரவில் துாங்குவோர் பெட்டியிலிருந்து திடீரென உருவாகும் 'கட கட' சத்தத்தால் அலறியபடி எழுகின்றனர்.இதன் காரணமாக துாக்கம்போய் ஒரு வித அச்சத்துடன் பயணிக்கின்றனர்
. பெட்டிகளில் சங்கிலியால் தொங்கவிடப்படும் படுக்கையை பயன்படுத்துவோர் அச்சத்துடன் பயன்படுத்தும் நிலையே தொடர்கிறது. கழிப்பறைகளோ மோசமான நிலையில் உள்ளன.இங்கு செல்வோர் தொற்றுக்கு ஆளாகும் நிலையே உள்ளது.
இது போன்ற நிலையில் பயணிக்கும் நிலை குறித்து ரயில்வே நிர்வாகத்திற்கு புகார்கள் பல அனுப்பியும் எதையும் கண்டுக்காமல் உள்ளது.இது தொடர்பாக ரயில்வே துறையிடம் எடுத்துரைக்க வேண்டிய மக்கள் பிரதிநிதியும் எதையும் கண்டுக்காததால் இந்நிலை தொடர்வதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.