ADDED : ஆக 23, 2025 05:47 AM
பழநி: பழநி அஞ்சல் துறை வணிக பிரிவு சார்பாக கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க செப்.1 இறுதி நாளாக அறிவித்துள்ளது.
அஞ்சல் துறையின் சார்பில் தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா என்ற பெயரில் கல்வி உதவித் தொகை திட்டம் தபால் தலை சேகரிக்கும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன்பெறலாம். தபால் தலை சேகரிப்பு சங்க உறுப்பினராக, தபால் தலை சேகரிப்பு கணக்கு வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும். ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். தொடர்பான விண்ணப்பத்தை www.tamilnadupost.nic.in ல் பெறலாம். தென் மண்டல அஞ்சல் துறை தலைவர், மதுரை மண்டலம், மதுரை, 625002 என்ற முகவரிக்கு செப்., 1 க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என திண்டுக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் தெரிவித்துள்ளார்.

