/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பள்ளி ,கல்லுாரி செய்திகள் பன்னாட்டு பயிலரங்கம்
/
பள்ளி ,கல்லுாரி செய்திகள் பன்னாட்டு பயிலரங்கம்
ADDED : செப் 16, 2025 04:49 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் பான் செக்கர்ஸ் மகளிர் கலை அறிவியல் கல்லுாரி கலையரங்கத்தில் தமிழ்த்துறை, சிங்கப்பூர் அழகர்சாமி சக்திவேல் அறக்கட்டளை, திண்டுக்கல் வெற்றிமொழி வெளியீட்டகம் இணைந்து கவிதை படைப்பாக்க திறன் பன்னாட்டு பயிலரங்கம், நுால் வெளியீட்டு விழாவை நடத்தின.
கல்லுாரி செயலாளர் நேச சவுந்தரம், கல்லுாரி நிர்வாகி பர்த்தலமேயு, கல்லுாரி முதல்வர் சிறுமலர் தலைமை வகித்தனர். சிங்கப்பூர் அழகர்சாமி சக்திவேல் அறக்கட்டளை நிறுவனர் அழகர்சாமி சக்திவேல் பங்கேற்றார். சென்னை கட்டியக்காரி நாடக குழு நிறுவனர் ஸ்ரீஜித் சுந்தரம், பழனியாண்டவர் கலை, பண்பாட்டு கல்லுாரி பேராசிரியர் மீனா சுந்தர், ஜி.டி.என்., கலைக்கல்லுாரி வணிகவியல் பேராசிரியர் முருகானந்தம், ஓய்வு தாசில்தார் தாஜிதீன், வெற்றிமொழி வெளியீட்டாளர் தமிழ்தாசன், ஏ.பி.ஜெ.,அப்துல்கலாம் சமூக அறக்கட்டளை நிறுவனர் மருதைகலாம் கலந்துகொண்டனர்.