ADDED : பிப் 09, 2025 05:32 AM

அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் நாகரத்தினம் தலைமை வகித்தார்.
சாரதா அறக்கட்டளை தலைவர் சங்கர் முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் சிதம்பரம் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தங்க நாணயம், பரிசு வழங்கினார்.
மாவட்ட விளையாட்டுப் போட்டியில் வென்ற வர்களுக்கு கோப்பை வழங்கப்பட்டது. முதன்மை மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். ஆசிரியர்கள் தங்கமுத்து, ராஜ் விழாவினை ஒருங்கிணைத்தனர்.
12ம் வகுப்பு மாணவன் அழகர்சாமி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஆசிரியர் நாகலட்சுமி நன்றி கூறினார்.
