நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளியின் 66 ஆவது ஆண்டு விழா நடந்தது. பள்ளி செயலர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் பேசினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, பழநி மாவட்ட கல்வி அலுவலர் பரிமளா பங்கேற்றனர். பள்ளி குழு தலைவர் சித்ரா, உறுப்பினர் ராஜாகவுதம், தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம், உதவி தலைமை ஆசிரியர் கல்பனா பங்கேற்றனர்.

