நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி சண்முக நதி பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 29வது ஆண்டு விழா நடந்தது. பள்ளியின் செயலர் குப்புசாமி தலைமை வகித்தார். மாணவ, மாணவர்கள் பங்கேற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், தேசிய, மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுதல் தெரிவித்து, பரிசுகள் வழங்கப்பட்டன.
கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிறப்பு விருந்தினராக பேராசிரியர் ஞானசம்பந்தம், விருது பெற்ற நல்லாசிரியர் கணபதி கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் டாக்டர்கள் வேலுச்சாமி, சந்திரலேகா, அறங்காவலர் செந்தில்குமார், கல்வி ஆலோசகர் பாலசுப்பிரமணியன், முதல்வர் கதிரவன், நிர்வாக அலுவலர் சிவக்குமார், ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

