ADDED : ஜன 31, 2026 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானல் அப்சர்வேட்டரி நகராட்சி தொடக்கப் பள்ளி நுாற்றாண்டு விழா நடந்தது. 1926ல் ஆங்கிலேயர்களால் இப்பள்ளி துவங்கப்பட்டது. பள்ளியில் படித்த முன்னாள், இந்நாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பெற்றோர்கள் பள்ளிக்கு சீர்வரிசை அளித்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நகராட்சித் தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாய கண்ணன், கமிஷனர் சங்கர், கவுன்சிலர் முகமது இப்ராகீம் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் இமாகுலேட் பொற்கொடி, பொறுப்பு ஆசிரியர் சியோன் ஹேமா நளினி, பள்ளி மேலாண்மை உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் செய்திருந்தனர்.

