ADDED : பிப் 06, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை; தென்னம்பட்டி அரசு துவக்க பள்ளி 1907 ல் துவங்கப்பட்டது. 2007ல் கிராம மக்கள் தங்கள் செலவில் நுாற்றாண்டு விழா நடத்தினர். இந்நிலையில் நடப்பாண்டில் 100 ஆண்டுகள் கடந்த பள்ளிகளில் ஆண்டு விழாவுடன், நுாற்றாண்டு திருவிழா கொண்டாட அரசு அறிவுறுத்தியது.
இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இவ்விரு விழாக்களும் நடந்தது. தலைமை ஆசிரியர் பாக்கியராஜ் தலைமை வகித்தார். நுாற்றாண்டு துாணை முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி திறந்தார். ஆசிரியர் கருப்புச்சாமி வரவேற்றார். ஹரியானா முன்னாள் ஏ.டி.ஜி.பி., காமராஜா, முன்னாள் ஒன்றிய தலைவர் ராஜசேகர், பி.டி.ஏ., தலைவர் நரசிங்கன் பங்கேற்றனர்.