ADDED : நவ 15, 2025 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் புதிய கூடைப்பந்து மைதான திறப்பு விழா நடந்தது. முதல்வர் நாகரத்தினம் தலைமை வகித்தார். சாரதா கல்வி அறக்கட்டளை தலைவர் சங்கர் வரவேற்றார். செயலாளர் ஐயப்பன், உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் பாஸ்கரன் புதிய கூடைப்பந்து மைதானத்தை திறந்து வைத்து பேசினார். சிலம்பம், ஸ்கேட்டிங், பிரமிடு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

