நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: கொலை வழக்கில் கொடைக்கானலை சேர்ந்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
கொடைக்கானல் பூண்டி பகுதியை சேர்ந்த லோகநாதன் 60, இவர் 2019,அக்.24., மதியம் அரசு உயர்நிலைப் பள்ளி அருகே அவரது மகனுக்கு உணவு கொடுக்க சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த முருகன் 57 என்பவரால் அடித்துக் கொல்லப்பட்டார். இது குறித்த வழக்கு பழநி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கை அரசு தரப்பில் சிவக்குமார் வாதாடினார்.
கூடுதல் மாவட்ட நீதிபதி மலர்விழி தலைமையில் விசாரணை நடந்தது. இதில் கொலை செய்த முருகனுக்கு ரூ.11ஆயிரம் அபராதம், ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

