/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆதார் திருத்தப் பணிகளுக்காக பள்ளி மாணவர்களை அலைக்கழிக்கிறாங்க: ஊராட்சி வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்த கோரிக்கை

ADDED : பிப் 02, 2026 05:33 AM

ரேஷன் கார்டு, பள்ளி, கல்லுாரிகளில் சேர்க்கை, பத்திரப்பதிவு, சலுகைகளுக்கான அரசுத்துறை சான்றிதழ், பாஸ்போர்ட் போன்றவற்றிற்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆதார் பதிவுகள் மட்டும் இன்றி பால் ஆதார் கொண்டுள்ள மாணவர்களின் ஆதார் விபரங்களும், ஏற்கனவே பெறப்பட்டுள்ள பெற்றோரின் குளறுபடியான தகவல்களை கொண்ட ஆதார் விவரங்களிலும் திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.
இப்பணிகளை மேற்கொள்ள மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், மத்திய அரசின் தபால் துறை அலுவலகங்கள், தேசிய, கூட்டுறவு வங்கிகள் என, அரசுத் துறை சார்ந்த மையங்களில் இதற்கான சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவை பெரும்பாலான இடங்களில் செயல்பாடு இன்றி மூடப்பட்டு உள்ளன. செயல்பாட்டில் உள்ள ஒரு சில இடங்களிலும், நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 30 முதல் 50 நபர்களுக்கு மேல் ஆதார் திருத்தங்கள் மேற்கொள்வது இல்லை என, மைய அலுவலர்கள் பணிகளை புறக்கணிக்கின்றனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் தகவல்கள் குறித்த பதிவேற்றம் செய்வதற்காக, பெயர், பிறந்த தேதி, அலைபேசி எண், பெற்றோர் பெயரில் திருத்தம், முகவரி தொடர்பான மாற்றங்களுக்காக ஆதார் மையங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. சில வாரங்களாக மாணவர்கள் அரசுத் துறை ஆதார் மையங்களை நோக்கி படையெடுக்கும் சூழல் அதிகரித்துள்ளது.
தாலுகா, பொதுத்துறை, கூட்டுறவு வங்கிகள், தபால் துறை அலுவலகங்களில் செயல்படும் ஆதார் மையங்களில் பெரும்பாலானவை செயல்பாடின்றி உள்ளதாக மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு அழைக்கழிக்கப்படுவது தொடர்கிறது. சில தபால் அலுவலகங்களில் 2 வாரங்களுக்கு குறையாத அவகாச தேதியில் வந்து திருத்தம் செய்து கொள்ளும்படி பணியை, புறக்கணித்து அனுப்பும் அலட்சியம் நடக்கிறது. சம்பந்தப்பட்ட இடங்களில் கண்காணிப்பு அலுவலர்களின் அலட்சியம் காரணமாக, பள்ளி சார்ந்த பணியில் தாமதத்தை பல மாணவர்கள் எதிர்கொள்ளும் அவல நிலை தொடர்கிறது.