தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பள்ளி மாணவர்கள் தர்ணா

பள்ளி மாணவர்கள் தர்ணா

பள்ளி மாணவர்கள் தர்ணா


ADDED : அக் 23, 2026 08:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2026 08:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தெப்பத்துப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட இருபாலர் மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் 10,11,12ம் வகுப்பு ஆசிரியர்கள் 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

கல்வி ஆண்டு தொடங்கி 5 மாதங்கள் ஆன நிலையில் தங்களுக்கு பாடம் கற்பித்துக் கொண்டிருந்த ஆசிரியர்கள் பணியிட மாற்றத்தில் சென்றதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

தங்கள் படிப்பு வீணாக போய்விடுமென அச்சமடைந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர். ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்தவும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினர்.

நிலக்கோட்டை தாசில்தார் ராமசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செல்வக்குமார், விருவீடு போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்கள், பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் கல்வியாண்டு முடியும் வரை மீண்டும் பணி செய்வார்கள் எனவும், அடுத்த கல்வியாண்டுக்கு விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் கூறினர். இதையடுத்து மாணவர்கள் தர்ணாவை கைவிட்டு வகுப்புக்கு சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us