UPDATED : அக் 14, 2026 07:26 PM
ADDED : அக் 14, 2026 07:24 PM

அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த குறுவட்டம், மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் 25 தங்கம், 35 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 72 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.
இப்பள்ளி 11ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ மாவட்ட அளவிலான குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் 2ம் இடமும், வட்டு எறிதலில் 3ம் இடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். மேலும் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான வட்டு எறிதலில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவர்கள், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை தாளாளர் திருப்பதி, செயலாளர்கள் சுரேஷ், மீனா, கண்ணன் ஆகியோர் பாராட்டினர்.
